உயிருக்கு உத்தரவாதமில்லாத வட்டக்கொடை ரயில்வே கடவை

வட்டக்கொடை ரயில்வே நிலையத்துக்கருகில் காணப்படும் குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு வேலி காணப்பட்டாலும், சுமார் 7 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.இதனால் ரயில் வரும் வேளை குறித்த வேலியை மூடமுடியாத நிலை ஏற்படுவதால் மூங்கிலை வைத்து மூடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் ஊர் மக்கள் தெரிவிக்கையில், இவ் ரயில்வே கடவைக்கு பாதுகாப்பு வேலியை போடுமாறு பல முறை வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம் .ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கடவையையே பிரதான பாதையாக வட்டக்கொடை மேற்பிரிவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாடசாலை மாணவர்கள் தொடக்கம் தோட்டத்தொழிலுக்கு வேலைக்கு செல்வோர் முதல் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் எவரும் இக்கடவைக்கு உரிய பாதுகாப்பு வழங்க முன்வரவில்லையென மக்கள் அங்கலாய்கின்றனர்.

மேலும் ரயில் வரும் நேரத்தை அனுமானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் கடந்த காலங்களில் பல விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலை கடந்த 7 வருடமாக  தொடர்வதால் விரைவில் இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு வட்டக்கொடை மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.