உலகின் மூன்றாவது பெரிய வைரம்

உலகின் மூன்றாவது மிகப்பெரியதாக நம்பப்படும் வைரம் ஒன்று பொட்ஸ்வானாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1,098 கரட்கள் எடையுள்ள குறித்த கல்லானது பொட்ஸ்வானா ஜனாதிபதி மொக்வீட்சி மஸிஸியால் காண்பிக்கப்பட்டுள்ளது. வைர நிறுவனமான டெப்ஸ்வானாவால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வாரங்களிலேயே குறித்த வைரம் காண்பிக்கப்பட்டுள்ளது.