உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இருந்து புளொட் ஒதுங்கும்?

தேர்தல் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்களில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படுவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள புளொட் அமைப்பு, தேர்தலில் இருந்தே ஒதுங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, கூட்டமைப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மீறி, தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதால், இத்தேர்தலில் இருந்தே ஒதுங்கியிருக்கும் நிலையை எடுக்க வேண்டும் என, கட்சியின் உயர் மட்டத்தினர் கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறியமுடிகிறது.