உள்ளூர் விமான சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிப்பு

நாடாளுமன்றத்தில், நேற்றுக் காலை சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுன் பிரகாரம், உள்நாட்டு விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக தெரியவருகின்றது. இதற்கான அனுமதியின் பின்னர், குறிப்பிடப்பட்ட உள்நாட்டு விமானச் சேவையை ஆரம்பிப்பதற்கும் பொல்கஹாவெல- குருநாகல் வரையிலும், அளுத்கமை – காலி பகுதிகளுக்கு, இரட்டை புகையிரத பாதைகளை நிர்மாணிப்பதற்கும் 1.05 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மூன்று திட்டங்களுக்கும் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொது- தனியார் பங்குகளின் அடிப்படையிலேயே, இந்த விமானச் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இத்திட்டங்களை, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு கையாளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.