உழைக்கும் மக்களினதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களினதும் உரிமைகளை வலியுறுத்தி காவத்தையில் கூட்டு மே தினம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000/= அதிகரிக்க கோரியும் ஆசிரிய உதவியாளர்களை நிரந்தரமாக்க கோரியும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க கோரியும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தியும் பல அமைப்புகளினது கூட்டு மே தினக் கூட்டம் காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் எதிர்வரும் மே 01ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா, மக்கள் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அழைப்பாளர் டபிள்யூ. சோமரட்ன, மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் செயலாளர் பா. மகேந்திரன், சமூக சீராக்கல் இயக்கத்தின் அழைப்பாளர் எம். கமலதாசன் ஆகியோரின் உட்பட பலர் உரையாற்றவுள்ளனர். இக் கூட்டத்தில் உழைக்கும் மக்களின் தலைமையிலான சேசலிச சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சமூக மாற்றத்தை வேண்டிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.