எகிப்துஎயார் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

எகிப்திய நகரமான அலெக்ஸ்‌ஸான்ட்ரியா நகரத்தின் கடற்பகுதியில் எகிப்திய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், காணாமல் போன எகிப்துஎயார் விமானத்தின் சிதைவுகளும் பயணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ்‌ஸான்ட்ரியா நகரத்துக்கு 290 கிலோமீற்றர் தொலைவிலேயே இன்று சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்திய இராணுவம் தெரிவித்ததாக எகிப்திய அரச தொலைக்காட்சி கூறியுள்ளது. 66 பயணிகளுடன் மத்தியதரைக் கடலில் மேற்படி விமானம் நேற்று காணாமல் போயிருந்தது.