எங்கே தேர்தல்முடிவுகள்?

நான் அறிந்த வரையிலான தேர்தல்
முடிவுகளை வைத்தே இப்பதிவு

அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின்
கோட்டையென சொல்லப்படும் உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம் தொகுதிகளையும்,நல்லூர்
வட்டுக்கோட்டை தொகுதியில் ஐம்பது சதவீத
உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும்
என நினைத்தேன், தவறிவிட்டது

 

பருத்தித்துறை நகரசபையும் காங்கிரசின்
கோட்டையாகவே இருந்தது அதை மட்டும்
மீண்டும் கைப்பற்றியது

சாவகச்சேரி என்றும் தமிழரசுக்கட்சியின்
கோட்டையாகவே இருந்தது வந்துள்ளது
காங்கிஸஅங்கு நகரசபையைக் கைப்பற்றியது
மிகவும் ஆச்சரியமே!

யாழ்ப்பாணம் ,நல்லூர்த் தொகுதிகளில் காங்கிரஸும்
சரி தமிழரசுக்கட்சியும் சரி இழுபறியுடன் தான்
வெல்வது வழக்கம் ! அதே போலவே யாழ்மாநகர
சபையில் இருகட்சிகளும் வெற்றிக்கு நெருக்கத்தில்
வந்து அதில் ஒன்று வெற்றி பெற்றிருக்கின்றது