எனது காணியில் ஈ பி டி பி முகாம்! முறையிட்டும் பயனில்லை!

சிறீலங்கா அரசுடன் சேர்ந்து இயங்கிய ஈ.பி.டி.பி தனது சொந்த வீட்டை அடாத்தாக பிடித்து வைத்து முகாம் அமைத்துள்ளதாக தந்தை ஒருவர் பரிதாபத்துடன் அரசியல் அமைப்பு தொடர்பாக கருத்துகேட்கும் அமர்வில் கூறியுள்ளார். இதன் போது மேற்படி குழுவில் ஈ.பி.டி.பி உறுப்பினரும் வட மாகாணசபை எதிர்கட்சி தலைவருமான சி.தவராசா இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி யாழ் மாவட்டத்துக்கான அமர்வு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் போதே தனது ஆதங்கத்தை வயோதிப தந்தை ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இந்த அமர்வு அரசியல் அமைப்பு தொடர்பானது எனவும் இதில் இவ்வாறான விடயங்கள் கதைக்க முடியாது எனவும் குழுவின் மேற்பார்வையாளர்களால் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

(சங்கதி 24.கொம்)