எபோலா பரவலை பிரகடனப்படுத்திய கினி

புதியதொரு எபோலா பரவலை கினி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகடனப்படுத்தியுள்ளது. ஏழு தொற்றல்களை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே இவ்வாறு கினி பிரகடனப்படுத்தியுள்ளது. இந்நிலையில், எபோலா நோயாளர்களுடன் தொடர்பிலிருந்திக்கக்கூடியவர்களை கினி தொடர்வதுடன், தடுப்புமருந்துகளைப் பெற்றவுடன் விநியோகிக்கும் என அந்நாட்டின் சுகாதாரமைச்சர் றெமி லமஹ் நேற்று தெரிவித்துள்ளார். புதிய எபோலா பரவலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்த நிலையிலேயே லமஹ்ஹின் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.