எரிபொருள் விலை குறித்து அதிரடி அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும்  லங்கா ஐஓசி ஆகியவை எரிபொருள் விலையை இன்று இரவு 10 மணிமுதல் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.