’ஒன்றிணைந்த எதிரணியில் ஐந்து வேட்பாளர்கள்’

“நாடே அறியும்படி ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எமது ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் அறிவிக்கவுள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைவரினதும் இணக்கப்பாடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் தகுதியான ஒருவரை தெரிவு செய்யும் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித் தகைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா வலியுறுத்தியுள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரின் கல்விப்பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை முடிந்தால் வெளிப்படுத்துமான கூறுகின்றோம். எமது தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் கல்விதகைமைகளை வெளிப்படுத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்” என்றார்.