ஒமிக்ரோன் தாக்கம்: ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்றும், இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட் எடுத்திருந்தனர்.  ஆனால் கடைசி நேரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டிருந்த 1,259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன் உள்பட பல நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டன. 

விமான நிலைய ஊழியர்கள் பலர் வேலைக்கு வராததாலும், சிலர் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாலும் விமான சேவை நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.