ஒரு சாமான்ய தமிழ்நாட்டு பிரஜையின் ஆதங்கம்

திமுகவையும், அஇஅதிமுகவையும் அகற்ற மக்கள் விரும்பவில்லையா அல்லது அந்த இரண்டு கட்சிகளையும் அகற்றும் சக்தி மக்கள் நலக்கூட்டணிக்கு்இல்லை ; எனவே மக்கள் அந்த கூட்டணியை ஒரு பொருட்டாக கருதவில்லையா? கம்யூனிஸ்டுகள் வாக்குகளை பெறத்தவுறினாலும் சமூக விஞ்ஞானம் அறிந்தவர்கள்; மக்களிடம் சென்று பணியாற்றுபவர்கள் என்பது்உண்மையானால் உண்மை நிலையை சரியாக சொல்லவேண்டும். வாக்களித்த 100 பேரில் 40 பேர திமுகவிற்கு, 41 பேர் அஇஅதிமுகவிற்கு வாக்களித்துள்ளது எதை உணர்த்துகிறது. தேவை திமுக, தேவை அஇஅதிமுக இந்த மாற்றுவோம் என்பதெல்லாம் கூடாத வேலை என்பதை்உணர்த்துகிறதா? அல்லது மாற்றம் வேண்டும் என்றே கருதினாலும் அதற்கு உங்களிடம் சக்தி இல்லை என்று சொல்கிறார்களா? ஊழல் என்பதை ஏற்கும் மக்களா? ஊழல் ஒழிப்பு அவசியம் இல்லை என்பதா? இந்த இரண்டு கட்சிகளின் ஊழல் தமக்கு லாபம் என வாக்களிக்கும் மக்களும் உணர்கிறார்களா? ஊழலை வேண்டாம் என்று சொல்ல மக்கள் தயாராகவில்லையா?
(Kanniappan Elangovan)