ஓர் அற்புதன்


(சமஸ் Samas)

சில வாரங்களுக்கு முன் பர்ஸை ரயிலில் நான் தவறவிட்டதைப் பகிர்ந்திருந்தேன். சில ஆயிரம் பணம், வங்கி பண அட்டைகள், அடையாள அட்டைகள் அதில் இருந்தன. ரயில் நிலையத்தில் விசாரித்தேன். பயன் இல்லை. கையோடு வங்கி அட்டைகள் செயலாக்கத்தை முடக்கிவிட்டேன். அடையாள அட்டைகளுக்குப் பிரதிகள் இருந்தன. அதோடு மறந்துபோனேன்.