’கடலட்டை பண்ணைகள அமைக்க ஏற்பாடு’

வடமாகாணத்தில், நுற்றுக்கணக்கான கடலட்டை பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்: வருவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இயக்கச்சியில், இயக்கி உணவகத்தை, இன்று(15) திறந்துவைத்தப் பின்னர் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவி;தார்.