கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும் ஐ.ம.சு.கூ சமுகமளிக்கவில்லை

சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் நிறைவடைந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், ஒழுங்குப்பத்திரத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட யோசனையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவருவதற்கு, இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் பங்கேற்கவில்லை. சபையமர்வுகளில் தாம் இன்றும் பங்கேற்கப்போவதில்லையென ஐ.ம.சு.கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.