கட்டுப்பாடு தளர்வால் அமெரிக்காவில் பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல மாகாணங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 இலட்சத்தை தாண்டியுள்ளது. 2.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.