கண்டி – கோட்டைக்கிடையில் புதிய ரயில்சேவை இன்று முதல்!

கண்டி – கொழும்பு, கோட்டை புகையிரத நிலையங்களுக்கிடையிலான புதிய அலுவலக ரயில் சேவையொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.35 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது காலை 7.16 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.