கலப்பு முறையில் ஜூனில் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் 2016
கலப்பு முறை
தொகுதி வாரி முறை
விகிதாசார முறை
விருப்பு வாக்கு
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் நடைபெறும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், நடைபெறவுள்ள இத்தேர்தல், விருப்பு வாக்குகளைக் கொண்ட விகிதாசார முறையில் மாத்திரமன்றி, தொகுதி வாரி முறையையும் இணைத்தே நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், சில உள்ளூராட்சி சபைகள், விசேட ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் மற்றைய உள்ளூராட்சி சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இதேவேளை, எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடாத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.