கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம். ஜனவரி 5இல் பொதுத் தேர்தல்?

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாகவும், அரச அச்சுத் திணைக்களத்துக்கு வர்த்தமானி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நிலையில், எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதியன்று, பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.