கல்வியை விட ஹிஜாப் முக்கியம்..: மகளை பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு திங்கட்கிழமையன்று பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று ஏராளமான மாணவிகள் பள்ளிகளையும், தேர்வுகளையும் புறக்கணித்து வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி ஐந்து முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை மாணவர்கள் எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்ல அனுமதியில்லை என்று உத்தரவிட்டது.