காசை எண்ணியோரில் ஒருவர் கைதானார்

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பொதுமக்கள் அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட பின்னர், பணத்தை எண்ணிக் கொண்டிருந்த குழுவில் குறித்த சந்தேகநபர் இருந்ததாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.