காத்தான்குடியில் ஐ.எஸ் முகாம்

இலங்கையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான பயிற்சி கூடமாகவும் இருந்த, பயிற்சி முகாமொன்று, விசேட அதிரடிப்படையினரால், மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டது. மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்தமுகாம் மு​ற்றுகையிடப்பட்டது. தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த​வர் என்ற சந்தேகத்தின் பேரில்​ கைது செய்யப்பட்ட, அப்துல் ரவூப் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.