கியூபாவுக்கு புதிய தலைவர்

கியூபாவின் மிகவும் அதிகாரமிக்க பதவியான கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது செயலாளராக மிகேல் டயஸ்-கனல் பெயரிடப்பட்டுள்ளார். அந்தவகையில், 1959ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் கஸ்ரோவின் பெயரில்லாத முதலாமவராக கியூபாவை டயஸ்-கனல் ஆளவுள்ளார். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குறித்த நகர்வானது நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.