குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரணி முன்னேற்றம்

குவைத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஏறத்தாழ அரைவாசி ஆசனங்களை எதிரணி பெற்றுள்ளது. அரச தொலைக்காட்சியில் தேர்தல் ஆணைக்குழுவால் நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களைக் கொண்டிருந்த எதிரணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அல்லது எதிரணியை நோக்கிய வேட்பாளர்கள், 50 ஆசனங்களைக் கொண்ட தேசிய சட்டசபையில் இம்முறை 24 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். எவ்வாறெனினும் இத்தேர்தலில் 29 பெண்கள் போட்டியிட்டபோதும் எவரும் வெல்லவில்லை.