குஷ்புவுக்குக் கொடுப்பதற்கு பதில் ஜோதிமணிக்குக் கொடுங்கள்.. – ராகுல்

குஷ்புவுக்கு ஆர்.கே. நகர் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தயாரானது. ஆனால், ஆர்.கே. நகர் வேண்டாம், ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியை கொடுங்கள் என்று ராகுல் கூறிவிட்டாராம். தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் குஷ்பு போட்டியிடும் வகையில், அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க திமுக மேலிடம் முன்வந்தது. ஜெயலலிதாவுக்கு சரியான போட்டியாகவும் இருக்கும், குஷ்புவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் திமுக இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க நினைத்தது.

இது குறித்து இளங்கோவனிடமும் பேசியது. ஆனால், ஒரு தொகுதியை விட்டுக் கொடுப்பதாக இருந்தால், அது ஜோதிமணிக்காக அரவக்குறிச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று ராகுல் உறுதியாகக் கூறிவிட்டாராம். அதே சமயம், குஷ்புவைப் பற்றியோ, ஆர்.கே. நகர் தொகுதியைப் பற்றியோ ராகுல் ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம். இதனால், கொடுக்க வந்தவர்களுக்கும், வாங்க நினைத்தவர்களுக்கும் தர்மசங்கடமாக போய்விட்டதாம்.

என்னதான் இருந்தாலும் கட்சிக்காக உயிரைக் கொடுத்து உழைத்தவர்களின் பின்னால் இருப்பதால், கட்சியின் சிறந்த தலைமை என்பதை ராகுல் நிரூபித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் சிலாகிக்கின்றனராம்.