கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி 86 தொகுதிகளில் முன்னிலை

கேரளாவில் 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 86 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணி 52 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. கண்ணூர், திருச்சூர், ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் இடது சாரிகள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர். ஆனாலும் திருவனந்தபுரம், எர்ணாக்குளம், கோட்டயம் ஆகியவற்றில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கடும் சவால் அளித்து வருகிறது. திருச்சூரில் இடது ஜனநாயக முன்னணி 13 தொகுதிகளிலும் வெற்றி முகம் காட்டி வருகிறது. திருவனந்தபுரத்தில் 14 தொகுதிகளில் இடது சாரிகள் 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.