கையேந்துவதை விட இருப்பதை காப்போம்

கையேந்துவதை விட இருக்கும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்போம். சிறுபான்மையினரின் பூரண ஒத்துழைப்பின்றி, பெரும்பான்மை இன மக்களின் அமோக விருப்பத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பதவிப்பிமாணம் செய்ததன் பின்னர், நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அது தெட்டத்தெளிவானது.