கொடிய “கொறோனாவை தோற்கடிப்போம்!

அதற்கும் பிறகு தனிமைப்படுத்தும் நிலையங்களை எங்கள் பிரதேசங்களில் அமைக்க வேண்டாமென்று ஆர்ப்பாட்டம் செய்தோம்!!!!

அதன்பின் சில பகுதிகளில் சுகாதார சேவைப் பணியாளர்களை, பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்றுவதை எதிர்த்தோம்!!!!

இன்று

இனங்களின் அடிப்படையில் மதங்களின் அடிப்படையில் பிரதேசங்களின் அடிப்படையில் ஆரம்பிக்கின்றோம்!!!

நாம் சுக்குநூறாக தகர்த்த இந்த இனவாத மதவாத பிரதேசவாத பகைமை இந்த நாட்டில் கொறோனாவை தோற்கடித்து நாட்டைக் காக்கும் போராட்டத்தை பலவீனப்படுத்தும், போராட்ட சக்தியை மழுங்கடிக்கும்!!!

சுனாமியின் பின் ஒற்றுமையாக எழுந்து நின்ற எங்களை இன்று எழுந்து விடாமல் தடுப்பது

இந்த பிரிவினைகளே!!!

நமக்கு இந்த நேரத்தில் தேவையானது #கொறோனாவை வெல்வதே!!!

நமக்கு தேவை இலங்கையர்களின் #ஒற்றுமையே!!!!

நமக்கு தேவை மனிதாபிமானத்துடன் ஒன்றாக கைகோர்த்து “கொறோனாவை ” ஒழிக்கும் வேலைத்திட்டமே!!!

ஆதலால்

இலங்கையராக ஒற்றுமைப் படுவோம்!!!

மனிதாபிமானத்தோடு ஒன்றாக கைகோர்த்து “கொறோனாவை ” ஒழிப்போம்!!!

ஆகையால்

சுகவீனமுற்றவர்களின் படங்களை சமூக தளங்களில் பதிவேற்றாமல் இருப்போம்!!!!

இறந்தவர்களின் படங்களை போடாமல் இருப்போம்!!!!

இது எதுவும் வேண்டாம்!!!

கொடிய “கொறோனாவை ” தோற்கடிப்போம்!!!

மக்கள் நலனோம்பும்
உங்கள் தோழன்
பி. ரத்னாயக்க.