‘கொரோனா’ வைரஸ் பரவலாமென சீனா எச்சரிக்கை

சீனாவில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ‘கொரோனா’ வைரஸ், தொடர்ந்தும் பரவக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக, அந்நாட்டுச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த வைரஸ் தொடர்பில் இலங்கையிலும் விசேட சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கைச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.