கொலம்பியத் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் மதுரோ

கொலம்பிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலொன்றுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு ஆயுதப் படைகளுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படைகளின் (ஃபார்க்) முன்னாள் கொரில்லா தளபதிகள் குழுவொன்று ஆயுதந்தரித்ததற்கு மத்தியில் எல்லையில் இராணுவ ஒத்திகைகளை அறிவித்துள்ளார்.