கொழும்பில் தெரு ஓரங்களில் தவிக்கும் மலையக இளைஞர்கள். கண்டுகொள்ளாத மலையக தமிழ் தலைமைகள்..

அரசியலில் வாயால் வடை சுடும் மன்னர்கள்தான் மலையக அரசியல் தலைமைகள்.அதை அடிக்கடி நிரூபிப்பதில் உங்களை விட வேறு யாரும் இருக்க முடியாது..

இந்த விடயம் மனோ கணேசனுக்கு தெரியவந்தால் கொழும்பு சிங்கம் சினம் கொண்டு விடும். உடனடியாக எதிர்க் கட்சியுடன் ஒரு மந்திர ஆலோசனை பாராளுமன்றத்தில் இதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வருவோம். இப்படி பிற்போக்குத்தனமான சிந்திக்க மட்டும் தான் இவர்களால் முடியும் மக்களைப் பற்றி சிந்திக்க முடியாது மக்களின் நிலையிலிருந்து…

பிரபா கணேசன் வாக்கு பிச்சைக்காக வன்னியில் சுற்றித் திரிகிறார்.சொந்த இடம் மக்களை காக்க முடியவில்லை இதில் ஒரு புனைப்பெயர் வன்னி நாயகன். நீங்கள் வன்னி நாயகன் அல்ல வக்கற்ற நாயகன் அரசியலில்…

அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்.ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் அரசியலைப் பொருத்தவரை.அரசியல் இருப்புக்கான பதவிக்கான அரசியல் தான் உங்களின் அரசியல்.அதிலிருந்து நீங்கள் எப்பொழுதுமே மீண்டு வரப்போவதில்லை..

சிலவேளை இப்பொழுது ஊடகத்தில் வந்துவிட்டது என்று இதை வைத்து அரசியல் செய்ய சில தலைமைகள் முயற்சி செய்வார்கள். அப்படியென்றால் இந்த இளைஞர்களுக்கு ஒரு விடிவு கிடைக்கட்டும்.

கற்றுக்கொள்ளுங்கள் இவரிடம் இருந்து பாலித தெவரப்பெரும. சொந்த இனமாக இருக்கட்டும் அல்லது பிற இனமாக இருக்கட்டும் அரசியல்வாதியாக இருந்தாலும் அரசியலுக்காக இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் அவரிடமிருந்து மனிதநேயத்தை கற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு அதிகம் இருக்கின்றது முடிந்தால் முயற்சி செய்யுங்கள் கற்றுக்கொள்வதற்கு.அதிகமான தமிழ் அரசியல் தலைமைகள் உடுத்தும் உடை தான் அழகாக இருக்கிறது. அவர்களின் மனது என்னவோ அழுக்காக தானிருக்கிறது பாமர மக்களுடன் பழகும்பொழுது..

இறுதியாக ஒன்று நினைவில் வருகிறது. இந்த வசனத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் நான் படிக்கும் காலங்களில். வகுப்பில் ஒரு மாணவனுக்கு படிப்பு ஏறவில்லை என்றால் படிக்கும் கெட்டிக்கார மாணவன் ஒருவனின் சிறுநீரை வேண்டி குடிக்கச் சொல்லி. இப்படி நானும் எனது இளமைக்காலத்தில் அதிகமான முறை திட்டு வாங்கி உள்ளேன் அது இப்போது நினைவில் வருகிறது.ஆனால் நான் பின்னர் கெட்டிக்கார மாணவனாக மாறிவிட்டேன். என்னைத்தான் குறிப்பிட்டுள்ளேன் வேறு யாரையும் அல்ல..

எனது பதிவு சரி என்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.

அன்புடன்
அரசியல் சாணக்கியன்.