கொழும்பில் தொலைக்காட்சி செய்தி வாசிக்கும் பெண் கடத்தப்பட்டு நிர்வாணமாகப் படம் பிடிக்கப்பட்டார்…

கொழும்பில் பிரபல தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றும் பெண்ணொருவர் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டுப் புகைப்படம் எடுக்கப்பட்டு, நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் நடுவீதியில் இறக்கிவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றும் குறித்த பெண் தனது வேலை நேரம் முடிந்து, அங்கு பணி புரியும் சக ஆண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு சென்ற வேளையில் வெள்ளை வேனில் வந்த இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் அவ்விருவரையும் கடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த 19ம் திகதி, மஹரகம ரத்மல்தெனிய பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றதாக பொலிஸில் குறித்த பெண்ணினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தான் கடத்தப்பட்ட பின்னர் கடத்தல்காரர்களினால் தான் நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தன்னிடமிருந்த தங்க ஆபரணங்களையும் கொள்ளையடித்த மர்ம நபர்கள் இறுதியில் கொட்டாவ இரயில் பாலத்திற்கருகில் இறக்கிவிட்டதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.