கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்னால், இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ். மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.