சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

இலங்கையில் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் செயற்பாடு வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கு இன்று காலை ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.