’சிறுபோகத்தில் விதை நெல் உற்பத்தியில் ஈடுபடுங்கள்’

அண்மையில் நடைபெற்ற குடமுருட்டி, கரியாலை நாகபடுவான் குளங்களுக்கான சிறுபோக நெற்செய்கைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நெல்லை மட்டும் நம்பி, விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடக் கூடாதெனவும் இலாபம் தருகின்ற உப உணவுப் பயிர்ச் செய்கையிலும் கூடுதலாக ஈடுபட வேண்டுமெனவும் கூறினார்.

உப உணவுப் பயிர்ச் செய்கை, பெரும் இலாபங்களைத் தருவதாகத் தெரிவித்த அவர், இயற்கை உரங்களைக் கூடுதலாகப் பயன்படுத்துமாறும் குறிப்பாக, நோய் தொற்றிய விதை நெல்லை மீண்டும் பயன்படுத்த வேண்டாமெனவும் கூறினார்.

கால்நடைக்கான புல் வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும் எனவும் சிறுபோகத்தில் விதை நெல்லுக்கான உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம், காலபோகத்தில் விதை நெல் நெருக்கடியில் இருந்து விவசாயிகள் மீளமுடியும் எனவும், எஸ்.அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.