சி.வி. தலைமையில் அரசியலமைப்பு முன்மொழிவு குழு

வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில், வட மகாணசபை உறுப்பினர்கள் 19 பேரைக் கொண்ட அரசியலமைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதன் மூலம், வட மகாணத்தில் வசிக்கும் பொதுமக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அமைப்புகளின் யோசனைகனை பெற்று, அதன் மூலம் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்காக இணைத்துக் கொள்ளும் பொருட்டான முன்மொழிவுகளை உருவாக்கி, மாகாணசபையின் அனுமதியைப் பெற்று, அரசியலமைப்பு சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபையின் 44 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (26) யாழ்ப்பாணம், கைதடியிலுள்ள மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றபோது, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.