சீனாவின் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி

சீனா உலகிலேயே மிகப்பெரிய ரேடியோ தொலைநொக்கி மற்றும் உள்வாங்கியை நிறுவி, வேற்று கிரக மனிதர்கள் தொடர்பாக ரகசியமாக பல ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா ஒரு விடையத்தில் இறங்கி அது தொடர்பாக ஆராய்கிறார்கள் என்றால் அதனை நாம் வெறுமனவே அசட்டை செய்ய முடியாது. அவர்கள் ஏதோ ஒன்றை குறிவைத்து ரகசியமாக ஆராட்சிகளை மேற்கொண்டு வருவதும். இது தொடர்பாக அவர்களுக்கு ஏதோ தகவல் கிட்டி விட்டதா ? என அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலமை உள்ளது. உலகில் உள்ள பல வல்லரசு நாடுகள் வேற்று கிரக மனிதர்கள் தொடர்பாக பல ஆரட்சிகளை செய்து வருகிறது. ஆனால் அவர்கள் வேற்றுக் கிரக மனிதர்களை கண்டு பிடித்து அவர்களோடு கை குலுக்க இதனைச் செய்யவில்லை.

மாறாக அவர்கள் மனித குலத்தை விட அறிவியலில் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்றால். அவர்களது டெக்னாலஜியை அறிய முற்படுவதும். அதனை பாவித்து ஏனைய நாடுகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதுமே அவர்களது தலையாக கடமையாக உள்ளது. இந்த வகையில் தற்போது சீனா நடத்தும் ஆராட்சி உலகில் உள்ள பல வல்லரசு நாடுகளை கவர்ந்துள்ளது. அவர்கள் திடீரென எதற்காக வேற்றுக் கிரக மனிதர்கள் தொடர்பாக ஆராய ஆரம்பித்துள்ளார்கள் என்பது ஒரு பரபரப்பான தகவலாகவே உள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.