சைரன் ஒலி கேட்டு குழந்தையுடன் ஓடினேன்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இன்று காலை டெல்லிக்கு முதல் விமானம் வந்தது. முதல் விமானத்தின் மூலம் 212 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பியவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். நாடு திரும்பியர்வகள் பலரும் இஸ்ரேல் நிலவரத்தை விளக்கினர். அவர்களில் இளம் பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் தப்பித்ததை வேதனையுடன் நினைவுகூர்ந்தார்.