ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்.

ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோர் இணைந்து, ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக, நேற்றைய தினம் (04.05.mm2016) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே இந்த அரசியல் கூட்டணி உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டணியில், அண்மைய நாடாளுமன்றத் தேர்தலின் போது, உருவுாக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் கட்சியான, ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட 10 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்துள்ளன.

தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலை அமைப்பு, தமிழ் மக்கள் அமைப்பு, ஈழப் புரட்சி அமைப்பு, சர்வதேச இந்து குருமார் சங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, சிறி ரெலோ, ஜனநாயகத்திற்கான மறுசீரமைப்பு அமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 10 அமைப்புகள் மற்றும் கட்சிகளே இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளளன.