ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஏகமனதாக தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரித்தார். அவரது யோசனையை செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.