ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறை

பொதுபல சேனா பொதுச் செயலாளர் குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.