டக்ளஸ் தாக்குதல்: எமில்காந்தன் உட்பட 10 பேர் விடுதலை; 6 பேருக்கு சிறை

1998ஆம் ஆண்டு, களுத்துறை சிறைச்சாலையில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களுக்குப் பத்தரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, எமில்காந்தன் உட்பட 10 பேர் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.