தடை செய்யப்பட்ட ஆடையுடன் வருகைதந்தவர்கள் கைது

தடை செய்யபட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் – ஜயபிம பிரதேசத்தில் வைத்து இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்​டிருந்த பெண்ணொருவர் முகத்தை முழுவதுமாக மறைத்தவாறு தனது கணவருடன் வருகைதந்துள்ளார்.