தமது தரப்பினரைக் கடுமையாக எச்சரித்தார் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் குறித்த உறுப்பினர்கள் நடந்துக்கொள்ளும் விதம் குறித்தே மஹிந்த எச்சரித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கமாக நடந்துக்​கொள்ளுமாறும், குழப்பங்கள் விளைவிப்பதன் மூலம் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாதென்றும் கலந்துரையாடல்கள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றும் மஹிந்த இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு அவர்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென்றும் மஹிந்த தமது தரப்பு உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

எனினும் சபாநாயகரின் செயற்பாடே தாம் அவ்வாறு நடந்துக்​கொள்வதற்கு காரணம் என இதன்போது மஹிந்த தரப்பினர் மஹிந்தவிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முறையொன்று இருப்பதாகவும் சட்டத்தை கையிலெடுக்காமல் சட்டரீதியாக செயற்படுமாறு இதன்போது மஹிந்த அறிவுரை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.