தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி !

செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தருமாறு மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை முழுமையாக தமிழகஅரசாங்கத்துக்கு மத்திய அரசாங்கம் குத்தகையாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் அங்கு உடனடியாக தடுப்பூசி தயாரிப்பை தமிழக அரசாங்கத்தால் தொடங்க முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.