தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகள்; திருத்தச் சட்டம் விரைவில்

தமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரச மொழிக் கொள்கையை மீறி செயற்படுகின்றமை தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்தல் மற்றும் மொழிப் பிரச்சினை தொடர்பில் கையாளும் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தீரமனாங்களை மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.