தமிழ் தேசியக் கூட்டமைப்பு: கலையரசனுக்கு தேசியப்பட்டியலில் இடம்

முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார். இன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.