தலிபான் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக, போதிய உதவிகள் கிடைக்காததால், அந்நாட்டு மக்கள் தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் சில மனிதாபிமான நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவளிக்க அரசு சாரா நிறுவனங்கள் முன்வந்த போதிலும் தலிபான் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின் காரணமாக, இதுபோன்ற அமைப்புகளில் பெண்கள் பணியாற்றுவதைத் தடைசெய்து, நாட்டில் செயல்படும் பல நிவாரண அமைப்புகள் தங்கள் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

அதன்படி, இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் சில மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு தலிபான் அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் நாட்டில் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள சட்டத்தை இரத்து செய்ய மாட்டோம் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.