தலைமையை விமர்சிக்காதே தமிழா!

தலைமைகள், தலைவர்கள் கடவுள்களுக்கு ஒப்பானவர்கள். தலைவர்களை கேள்வி கேட்பது தகாத செயல். அமைப்பை கட்சியை பலவீனப்படுத்தும் செயல். அதையும் தாண்டி அது துரோகச் செயல். இந்தக் கருத்தியல்தான் கண்மூடித்தனமாக ஒரு கட்சி, ஒரு இயக்கம், ஒரு தலைமை என தமிழரை வழி நடத்தியது. அது இறுதியில் ஒரு மாபெரும் அழிவாக முள்ளி வாய்க்காலில் கொண்டுபோய் எல்லாவற்றையும் முடித்தது.  தமிழ் சமூகத்தில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தலைமை பற்றி அறிந்துகொள்ள ‘ வரலாற்றின் சில வரிகள்’ என்ற பகுதியை வாசிக்கவும். இது 1980 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது.